இரத்தத்தால் எழுதிய தொடக்கம்....

Posted by அகத்தீ Labels:




புரட்சிப் பெருநதி22


இரத்தத்தால் எழுதிய தொடக்கம்


- சு.பொ.அகத்தியலிங்கம்




இஸ்கராவிலிருந்து வெளியேறிய லெனின் ஓயவில்லை.
அவர் தளர்வில்லா போராளிமட்டுமல்ல;
ஓயுதலற்ற பத்திரிகையாளரும் கூட.
முன்னேறு” [வெர்யாட்] எனும்
ஏட்டை துவக்கினார்.




ஜப்பானியர்கள் குண்டுகளால் நமக்குப் பதில் சொல்லுகிறார்கள் .நாமோ வெறும் மண் பொம்மைகளால் அதனை சந்திக்க வேண்டியிருக்கிறது” – இப்படி வேதனைப்பட்டனர் ரஷ்ய ராணுவ சிப்பாய்கள்.

1904 இல் ஜப்பானுடனான யுத்தத்தில் ரஷ்யா பெரும் தோல்வியைத் தழுவியது ; ஒரு லட்சத்து இருபதாயிரம் ரஷ்ய சிப்பாய்கள் பலியாகினர் . காயம்பட்ட ராணுவ சிப்பாய்களைக் காப்பாற்ற அனுப்பப்பட்ட சிறப்பு வாகனங்களை தாங்கள் கொள்ளையடித்த பொருட்களை எடுத்துச் செல்லவே தளபதிகள் பயன் படுத்தலானார்கள்.யுத்தத்தால் மக்கள் வாழ்வை மேலும் துயரம் சூழ்ந்தது .

 டிராட்ஸ்கி உள்ளிட்ட மென்ஷ்விக்குகள் தேசபக்தியோடு போரை ஆதரிக்கச் சொன்னார்கள் . ஜார் தோற்கட்டும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக போராடுவோம் என லெனினும் அவருடைய போல்ஷ்விக் பிரிவும் வழிகாட்டியது.

இஸ்கராவிலிருந்து வெளியேறிய லெனின் ஓயவில்லை . அவர் தளர்வில்லா போராளிமட்டுமல்ல ; ஓயுதலற்ற பத்திரிகையாளரும்கூட . “முன்னேறுஸவெர்யாட்] எனும் ஏட்டைத் துவக்கினார் .வொவோவ்ஸ்கி, ஒலிம்னிஸ்கி , பின்னர் இலக்கியவானிலும் முத்திரை பதித்த லூனாச்சார்ஸ்கி ஆகியோரும் ஆசிரியர் குழுவில் இருந்தனர் . இந்த ஏட்டில் வெளியான கட்டுரைகள் இச்சூழலில் செயல்பட வழிகாட்டிக்கொண்டே இருந்தன .

பீட்டர்ஸ் பர்க்கிலிருந்தபுட்டிலோங் தொழிற்சாலையில் நான்கு தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டதையொட்டி 1905 ஜனவரி 3 அன்று போராட்டம் வெடித்தது. ஜூபட்டோவ் எனும் போலீஸ் அதிகாரி நடத்திய தொழிற்சங்கமும் வேறுவழியின்றி போராட வேண்டியதாயிற்று.

இதற்கு முன்பே பதிரியார் கப்போன் தொழிலாளர்கள் மன்னர் ஜாரைச் சந்தித்து மனு கொடுத்தாலே பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என நம்பிக்கையூட்டி ஜனவரி 9 ஞாயிற்றுக் கிழமை பேரணி என்றும் அறிவித்திருந்தார் . அவர் தயாரித்த மனு ஆலைவாயில்களில் விவாதிக்கப்பட்டது .போல்ஷ்விக்குகள் இதில் பங்கேற்று சங்க உரிமை , பேச்சுரிமை ,பத்திரிகை சுதந்திரம் என்பவை குறித்து பேசி சேர்த்தனர் .அதே சமயம் ஜார் அடக்குமுறையை ஏவுவார் என எச்சரிக்கவும் செய்தனர் .

மாதாகோவிலின் கொடிகளையும், ஜார் அரசன் இரண்டாம் நிக்கோலாய் படங்களையும் தாங்கியவாறு; “எங்கள் தந்தை ஜாரே! உங்கள் பிள்ளைகள் குரலைக் கேளீர்!” என முழங்கியவாறு சுமார் ஒரு லட்சத்து நாற்பதினாயிரம் பேர் ஊர்வலம் சென்றனர்.குளிர்கால அரண்மனை மாடத்தில் மன்னர் தோன்றி நம் குரலைக் கேட்பார் என கப்போன் பாதிரியார் நம்பிக்கை அளித்திருந்தார் . ஆனால் மன்னர் தோன்றவில்லை; ராணுவம் துப்பாக்கியோடு தோன்றியது. சரமாரியாகச் சுட்டது. நிராயுதபாணியாக மனு கொடுக்க வந்தோர் இரத்த வெள்ளத்தில் வீழ்த்தப்பட்டனர்.

இந்த தாக்குதலில் 96 பேர் இறந்ததாகவும் 300 பேர் காயமடைந்ததாகவும் அரசு சொல்லிக் கொண்டது; உண்மையில் ஆயிரம் பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். இரண்டாயிரம் பேருக்கு மேல் காயமடைந்தனர் , பலர் காணாமல் போயினர். கிறுத்துவர்கள் மரபில் குருத்தோலை ஞாயிறு முக்கியமானதாகும். அதனை நினைவூட்டி வரலாறு இதனை இரத்த ஞாயிறு என்று பதிவு செய்து கொண்டது.

இந்த கோரத் தாக்குதல் ரஷ்யா முழுவதும் கோபப் பேரலையை உருவாக்கியது.ஜாரின் மீதிருந்த குருட்டு நம்பிக்கை தகர்ந்தது ; ஜாராட்சிதான் நமக்கு ஜென்ம விரோதி என மக்கள் கண்டுகொண்டனர் . போல்ஷ்விக்குகள் வீதிகளில் நின்று ஜாரிசத்தை வீழ்த்த அழைப்பு விடுத்தனர் .

ஜார் நமக்கு குண்டுகளைக் கொடுத்தான் ; நாம் அவனுக்குத் திருப்பிக் கொடுப்போம்என்கிற வாசகத்துடன் தொழிலாளர் வாழும் பகுதிகளில் போராட்ட தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டன.“எதேச்சதிகாரம் ஒழிக !” என்கிற முழக்கம் எங்கும் எதிரொலித்தது.செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மட்டுமல்ல; மாஸ்கோ, வார்ஸா, ரீகா, பாகு, லாட்ஸ், இவானோவா வாஸினெக்ஸ் உள்ளிட்ட நகரங்களுக்கும் வேலைநிறுத்தம் பரவியது.

அந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 லட்சத்து நாற்பதினாயிரம் பேர் பங்கேற்ற தொழிலாளர் வேலை நிறுத்தங்கள் வெடித்தெழுந்தன.அதற்கு முந்தைய பத்து வருடங்களில் எவ்வளவு நடந்ததோ அதைவிட பன்மடங்கு உழைப்பாளர்கள் வீதியில் திரண்டனர் .

இந்த நிகழ்ச்சியையொட்டி லெனின்ருஷ்யாவில் புரட்சியின் துவக்கம்என்கிற கட்டுரை ஒன்றை எழுதி வெளியிட்டார் . அதில், “வெகுவாக மக்கள் திரளின் அரசியல் உணர்வை இந்நிகழ்வுகள் உயர்த்தியுள்ளதுஎன மிகச்சரியாகச் சுட்டிக்காட்டினார் .

கப்போன் பாதிரி ஜாரின் கையாளா? இல்லையா? விவாதத்துக்கு லெனின் சொன்ன பதில் இன்றைக்கும் ஒரு வழிகாட்டியாகும் ,

அரசாங்கத்திடம் அப்படியொரு திட்டம் இருந்தது என்று ஆங்கிலேய மற்றும் பழமைவாத ஜெர்மனிய பத்திரிகைகள் எழுதுகின்றன. இது அநேகமாக உண்மையாக இருக்கலாம். ஜனவரி ரத்த 22 ஸபழைய காலண்டர்படி] அதையே உறுதி செய்கிறது. ஆனால் அப்படியொரு சதி இருந்தது என்பது பாதிரியார் கப்போன் அதற்கு உணர்வுப்பூர்வமற்ற கருவியாக இருந்தார் என்பதை நிராகரித்துவிடாது.ரஷ்யாவில் இளம்பாதிரியார்களில் ஒரு பகுதியினர் மத்தியில் சீர்திருத்த இயக்கம் நிலவுவதை சந்தேகத்திற்கு உள்ளாக்கிவிடாது . மத-தத்துவ சங்கக் கூட்டங்களிலும் ,தேவாலய வெளியீடுகளிலும் இந்த இயக்கத்தின் பிரதிபலிப்புகளைக் காணமுடிகிறது . இந்த இயக்கமானது தனக்குத் தானேநவீன பழமைவாதம்என்று பெயர் சூட்டிக்கொண்டுள்ளது .எனவே, பாதிரியார் கப்போன் ஒரு உண்மையான கிறுத்துவ சோஷலிஸ்ட் எனும் கருத்தையோ .இரத்த ஞாயிறு அவரை உண்மையான புரட்சிப் பாதைக்குத் திருப்பி இருக்கிறது என்பதையோ நிராகரிக்க முடியாது.ஜனவரி 22 படுகொலைகளைக் கண்ட பின்பு - கப்போன் எழுதிய கடிதங்களைக் கண்ட பிறகு இந்தக் கருத்தை நாம் ஆதரிக்க முனைகிறோம். ‘நமக்கு ஜார் இல்லைஎன்றும்; சுதந்திரத்திற்காகத் தொடர்ந்து போராடுங்கள் என்றும் அவர் அறைகூவல் விடுகிறார் .இவை அவரது நாணயத்தையும் , நேர்மையையும் உணர்த்துகின்றன . எழுச்சியைத் தொடர்ந்து நடத்துமாறு அறைகூவல் விடுவது ஒரு கையாளின் கடமைகளில் ஒன்றாக இருக்க முடியாது.எது இப்படியாக இருந்தாலும் இந்த புதிய தலைவர் குறித்த சமூக ஜனநாயகவாதிகளின் கொள்கை தெளிவானது .ஒரு ஜுபாட்டோவாதியிடம் ஸதொழிற்சங்கம் நடத்திய போலீஸ் அதிகாரி ] வைக்கிற கவனமான , எச்சரிக்கையான சந்தேகப்படும் கண்ணோட்டத்தைத் தொடர்வது . அதேசமயம் ஜுபர்ட்டோவாதியின் முயற்சியில் எழுந்தாலும் வேலை நிறுத்த இயக்கத்தில் பங்கேற்பது ; அதில் சமூகஜனநாயக முழக்கங்களைப் பிரபலப்படுத்துவது.”

லெனின் அடுத்துவரும் நிகழ்வுகள் நோக்கி தம் கூர்ந்த கவனத்தைத் திருப்பினார்.

புரட்சி தொடரும் …

நன்றி : தீக்கதிர் ,2 /4/2017.


0 comments :

Post a Comment