திருமணம், குடும்பம்: ஓர் அலசல்

Posted by அகத்தீ Labels:






திருமணம், குடும்பம்: ஓர் அலசல்

ஆர். சந்திரா

குடும்பத்தில் கூட்டாட்சி
ஆசிரியர் : சு. பொ. அகத்தியலிங்கம்வெளியீடு : பாரதி புத்தகாலயம்421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை சென்னை - 600 018.பக் : 48, விலை : ரூ.25/-

‘தீக்கதிர்’நாளேட்டின்ஞாயிற்றுக் கிழமை இணைப் பாக வெளி வரும் வண்ணக்கதிரில் தோழர் சு.பொ. அகத்தியலிங்கம் அவர்கள் திருமணம் தொடர்பான பல் வேறு விஷயங்களை விவாதத் திற்குட்படுத்தும் வண்ணம் ஆறு வாரங்கள் தொடர்ச்சியாக எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து “பாரதி புத்தகாலயம்” சிறிய புத்தகமாக வெளியிட்டுள்ளது பாராட்டத்தக்கது. தீக்கதிரில் வெளிவந்த கட்டுரைகளை அப்படியே வெளியிடாமல், மேலும் விஷயங்களை இணைத்து இந்நூல் வெளிவந்துள்ளது.திருமணங்கள் காலத்திற் கேற்ப மாறிக்கொண்டே வரு கின்றன என்ற யதார்த்தம் நூல் முழுவதும் ஒரு இழையாக வெளிப்பட்டுக் கொண்டே வரு கிறது. இன்று எல்லாமே அவ சரம் தான். அதே போல் எல்லாம் பேக்கேஜ் தான்.

மேடை அலங் காரம், கோலம், உணவு... என முன்பு வீட்டார். உறவினர், நண்பர்கள் கூடிதிட்டமிட்டு செய்த வேலைகளை இன்று ‘வெட்டிங்ப்ளானர்’என்ற பெயரில் செயல்படும் நிறுவ னங்கள் ஒப்பந்த அடிப்படை யில் செய்து கொடுப்பதால் வே லைப்பளு வெகுவாக குறைந் துள்ளது. ஆனால் எல்லாமே காசுக்குத்தான் என்ற நிலை உள்ளது. நூலாசிரியர் ‘மொய் ’ கொடுப்பதிலிருந்து துவங்கு கிறார். திருமண வீடுகளுக்கு வருபவர்கள் மொய் எழுதி, அடுத்த நிமிடமே உணவருந்தி விட்டு , வருகையை பதிவு செய்த நிறைவுடன் அவசரமாக வெளியேறுவதை குறிப்பிடு கிறார். ‘மொய்’ ஒரு சமூகநோ யாகிவிட்டது என்பதை பல எடுத்துக்காட்டுகளுடன் விளக் கியுள்ளார்.சீர்திருத்த திருமணங்கள் என்று கூறப்படும் திருமணங் கள் ஆடம்பரமாக, மாநாடு போன்று நடத்தப்படுவதும், எது உண்மையான சீர்திருத்த திருமணம் என்பதையும் எடுத் துரைக்கிறார். சாதி மத மறுப்பு திருமணங்களை அதிகப்படுத்த வேண்டிய அவசியத்தையும், இடதுசாரிகள் ஒரு சவாலாக இதை ஏற்று செயல்பட வேண் டிய அவசியத்தையும் கூறுகி றார். “மாப்பிள்ளை ஒரு அம்மாகோ ந்து” பல வீடுகளில் நடைபெ றும் விஷயங்களை அப்படியே படம்பிடித்துக் காட்டும் வண்ணம் உள்ளது. நூலாசிரி யரின் நண்பர்கள் வாழ்க்கையின் சம்பவங்களையே எடுத்துக் காட்டாக முன்வைப்பதுடன் “பெண்ணே பெண்ணுக்கு வில்லி” என்ற வாதத்தை உடைக்கிறார். கம்யூனிஸ்ட்டுகளுக்கு பெண் தருவது பற்றியும், நல்ல பையன் யார் என்பதற்கு விளக்கமும் இந்த அத்தியாயத்தில் தரப்படு கிறது. ‘பெண்ணுகருப்பு... என்ற அத்தியாயம் பெண்ணைப் பெற்றவர்களின் மனநிலையை விளக்குவதுடன், இச்சமுதாயம் பெண்ணை எப்படிப் பார்க்கி றது என்பதும் பதிவு செய்யப் பட்டுள்ளது.அதிலும் குறிப்பாக ‘பெண்ணை கட்டிக் கொடுப் பது என்ற வார்த்தை பயன்பாட் டை (பக். 26) நூலாசிரியர் சாடுகிறார். பெண் என்ன இட்லி சர்க்கரை போல ஒரு பண்ட மா? அதே போல் கன்னிகாதா னம் - பெண்ணை தானமாக கொடுக்க ஆடா? மாடா? என்ற கேள்விகளை எழுப்பி, பெண் களுக்கு பொருளாதார சுதந்தி ரம் மிகவும் அவசியம் என்பதை அழுத்தமாக குறிப் பிட்டுள்ளார்.

குடும்பத்தில் வேண்டாமா கூட்டாட்சி? என்ற அத்தியாயத் தில் பெண்ணின் உணர்வுகளை வெளிப்படுத்தும் உரிமை, அதை புரிந்து கொண்டு மதித்து செயல் படும் தன்மையை - காந்தி மற்றும் தோழர் இ.எம்.எஸ் ஆகியோ ரின் வாழ்க்கை சம்பவங்களை மேற்கோள் காட்டி விளக்கியுள் ளார். கணவன் - மனைவி இடையே புரிதல், தாம்பத்திய வாழ்வில் நெருக்கம், திருப்தி, இருவரி டையேயும் ஒரு பாது காப்பான உணர்வை ஏற்படுத் துமென்பது வலியுறுத்தப்பட் டுள்ளது. அதே போன்று ஒருவர் அணியும் உடைக்கும், அவரின் சிந்தனை களுக்குமிடையே உள்ள வேறு பாடுகளையும் நூலாசிரியர் குறிப்பிட்டு, சேமிப்பு, வீட்டு வேலை பகிர்வு போன்றவற்றின் மூலம் , ஜன நாயகப்பூர்வமாக முடி வெடுத்தல் ஆகியவற்றின் தே வையைப் பதிவு செய்துள்ளார். இறுதியாக, வாழ்க்கையை எப்படி வாழ்வது? அதில் சண்டை, சமர சம் என கலந்தது வாழ்க் கை பிரச் சனைகளை எப்படி அணுகுவது என்பதை விளக்கி, கணவன் - மனைவி இருவருமே பொது வாழ்க்கையில் ஏதோ ஒரு வகை யில் ஈடுபடவேண்டிய அவசி யத்தை வலியுறுத்தியுள்ளார்.ஒரு நாட்டின் அரசியலி லேயே ஜனநாயகம் கூட்டாட்சி, பிரச்சனைகள் வெடிக்கின்றன என்றநிலையில், குடும்பத்தில் ஜனநாயகம் கூட்டாட்சி என்ப தை அவ்வளவு சுலபத்தில் ஏற்க இயலுமா? கடினமான பணி தான். ஆனால் குடும்பத்தில் ஐன நாயகம், கூட்டாட்சி, அமைதி யாக, பாதுகாப்பான உணர்வு டன் குடும்பம் நடத்த தேவையா னவை. இந்நூல் முழுவதிலும் வெளிப்படும் கருத்துக்கள்“பெண்கள் இச்சமுதாயத்தில் வளர்க்கப்படுவதில்லை, வார்க் கப்படுகிறார்கள்” என்பதையும் அதை மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகி றது என்பது சிறப்பான அம்சம். தோழர் சு. பொ. அவர்களின் எளிமையான எழுத்து நடை, நேரில் பேசுவது போன்ற சொற் கட்டுகள், மென்மையான புண் படுத்தாத நகைச்சுவை ஆகிய வற்றின் மூலம் எடுத்த உடனே யே படித்து முடித்து விட இயலும் தன்மை கொண்ட நூலாக இது அமைந்துள்ளது. பெற்றோர், இளைஞர்,சமூகசீர்திருத்தபணி யில் ஈடுபடுவோர் என அனை வரும்படித்துபயன் பெற வேண் டிய நூல்.


நன்றி  தீக்கதிர் மார்ச் 3 2013